காஞ்சிபுரத்தில், வைக்கம் நூற்றாண்டு, காமராசர் பிறந்தநாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

காஞ்சிபுரத்தில், வைக்கம் நூற்றாண்டு, காமராசர் பிறந்தநாள் விழா!

இசையரங்கம், கவியரங்கம், உரையரங்கம்

காஞ்சிபுரம், ஜூலை 12- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் காமராஜர் பிறந்தநாள் விழா காஞ்சி தமிழ் மன்றத்தின் சார்பில்  கடந்த 9.7.2023 அன்று மாலை 5.30 மணியளவில், காஞ்சிபுரம் - வையாவூர் சாலை யில் எச். எஸ். அவென்யூ பூங்கா வின் உள்ளரங்கில் நடைபெற் றது. 

விழாவில் இசையரங்கம் , கவியரங்கம், உரையரங்கம் ஆகியவை நடைபெற்றன.‌ திருக்குறள் ஒலிப்புடன் விழா தொடங்கியது. ர.உஷா அனை வரையும் வரவேற்றார். 

விழாவிற்கு காஞ்சி தமிழ் மன்றத்தின் அமைப்பாளர் முனைவர் பா.கதிரவன் தலைமை தாங்கினார். தந்தை பெரியா ரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, பச்சைத் தமிழர் காமராசர் பிறந்தநாள் ஆகிய வற்றைக் கொண்டாட வேண் டியதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.

பேராசிரியர் முனைவர் பா. அரிஸ்டாட்டில், எ.கிருஷ்ணன், ஜி. ராமதாஸ், ஆ. மோகன், ஆகியோர் முன்னிலை வகித் தனர். 

இசையரங்கத்தில் இசையாசிரியர் வி. சுகந்தி, எழுச்சிப் பாடகர் உலகஒளி ஆகியோர் தந்தை பெரியாரைப் பற்றியும், பச்சைத் தமிழர் காமராசர் பற்றியும் பாடல்களைப் பாடினர்.

கவியரங்கத்தில் கவிஞர் அமுதகீதன், கவிஞர் நரேந்தி ரன், கவிஞர் தேவேந்திரன் ஆகி யோர் சிறப்பாக கவிதைகளை வழங்கி அனைவரின் பாராட் டையும் பெற்றனர்.

பள்ளி மாணவர் சுரேந்தர் காமராசர் பற்றி உரையாற்றி னார். 

இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராட்டமான வைக்கம் போராட்டம் குறித் தும், அதன் நூற்றாண்டு கொண் டாட வேண்டியதன் அவசியம் குறித்தும் பெரியார் தொண்டர் அ.வெ. முரளி சிறப்பான வகை யில்  படம் பிடித்துக் காட்டி யதுபோல்  உரையாற்றினார். 

பச்சைத் தமிழர் காமராஜர் அவர்களைப் பற்றி காமராசர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜனதா மு. சம்பத், காமராசர் அவர்களுடன் தம் அனுபவங்கள், காமராஜரின் பண்பு நலன்கள், காமராசரின் ஆழ்ந்த அரசியல் அறிவு, பெரியா ரும் காமராசரும் நாட்டு முன் னேற்றத்திற்கு ஆற்றிய தொண்டு முதலியவை குறித்து தமக்கே உரிய வகையில் சிறப்பாக உரை யாற்றினார்.

தே.நாகராஜன்  நன்றி கூறினார். 

நிகழ்ச்சிக்கு வந்த அனை வருக்கும் இயக்க நூல் கள் பரிசளிக்கப்பட்டன.

சீ.ஷகிலா, பெ.சின்னதம்பி, செந்தில்குமார், சு.சீனுவாசன்,  செல்வம், கே.பெருமாள், மு.சேகர், கே.நாச்சிமுத்து, பி.ஜெயந்தி, மருத்துவர் கு.வெ.பிரபு, மருத் துவர் க.சு.மோகனசுந்தரி, ஆர். பாபு, பி.கலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

சிறீராம் சப்ளையர்ஸ் கே. டில்லி, புகழேந்தி, வழக்குரை ஞர் ஜி. கோதண்டராமன், கவி ஞர் நரேந்திரன், முனைவர் பா.அரிஸ்டாட்டில், த.செந்தில் குமார் ஆகியோர் நிகழ்ச்சி சிறப் பாக நடைபெற இணைந்து ஊக்குவித்தனர்.

No comments:

Post a Comment