தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கேடயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கேடயம்


தஞ்சை, ஜூலை 20
- தஞ்சாவூர் சோழாஸ் ரோட் டரி சங்கத்தின் 8-ஆம் ஆண்டு பணி ஏற்பு நிகழ்வு 16.07.2023 மாலை 6.30 மணிக்கு நடை பெற்றது. 2023_-2024ஆம் ஆண்டின் புதிய தலை வராக நாகராஜன், செய லராக ஜெயுனுலாபுதீன், பொரு ளராக சகாயராஜ் ஆகியோருக்கும், புதிய உறுப்பினர்களுக்கும் ரோட்டரி துணை ஆளு நர் கிருபாகரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

விழாவில் முதன்மை விருந்தினராக லியோன் DGND RID 2981,   சிறப்பு அழைப்பாளராக டாக் டர் செல்வக்குமார் (PMIST),  சோழாஸ் சங்கத்தின் Mentor  (வழக்குரைஞர்) லாரன்ஸ், கிருஷ்ண குமார்,  விஷயன் அசோக், சிவக் குமார் மற்றும் மேனாள், இன்னாள் ரோட்டரி சங்க நிரு வாகிகள் 250 பேர் கலந்து கொண்டனர்.

நலதிட்ட உதவிகள் வழங்கப் பட்டது. சிறந்த மக்கள் பல்கலைக்கழகம் என்ற கேடயம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி வழங்கப் பட்டது. 

கல்வி உதவித் தொகை கள் தையல் எந்திரம் மற்றும் சலைவப் பெட்டி போன்றவை பயனாளி களுக்கு வழங்கப்பட்டன. சிவக்குமார் (IPP)  வரவேற் புரை ஆற்ற செயலாளர் ஜெயனுலாபுதீன் நன்றியுரை வழங் கினார்.

No comments:

Post a Comment