கோவில் தொடர்பாக வழக்கு தொடர்ந்த பார்ப்பனருக்கு நீதிபதிகள் கொடுத்த குட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

கோவில் தொடர்பாக வழக்கு தொடர்ந்த பார்ப்பனருக்கு நீதிபதிகள் கொடுத்த குட்டு

சென்னை, ஜூலை 9 - தமிழ்நாட்டில் கோயில்கள் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.

இந்த 7 வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி அதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எந்தக் கோயிலின் பக்தர் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மனுதரார் ரங்கராஜன் நரசிம்மன், நான் எல்லா கோயில்களிலும் பக்தர் தான் என பதில் அளித்தார். அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது நேர்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்குகள் நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே அந்த தொகை திரும்ப அளிக்கப்படும் எனவும், இல்லை என்றால் அந்த தொகை அபராதமாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் தொகையை செலுத்திய பிறகு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment