ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 6, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* 2019இல் திரும்பப் பெறப்பட்ட தகவல் பாதுகாப்பு மசோதாவை எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மோடி அமைச்சரவை முடிவு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு, எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.

* அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கோப்புகளை விரைந்து அனுப்பிட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ஆளுநருக்கு வேண்டுகோள்.

* காவிரியில் தண்ணீர் திறக்க கருநாடகாவுக்கு உத்தரவிடுங்கள் என டில்லியில் ஒன்றிய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும்படி ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* பாஜக ஆட்சியில் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ம.பி.யில் பழங்குடியினர் ஒருவர் மீது பாஜக தலைவர் சிறுநீர் கழித்தது குறித்து ராகுல் பேச்சு.

* தனக்கு வேண்டாதவர்கள் மீது வழக்கு போடும் பிரதமர் மோடி, ஆட்சி பறிபோனால் அவருக்கு என நடக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என லாலு எச்சரிக்கை.

தி இந்து

* நிற அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இந்தியாவில் கடைப்பிடித்து வரும் இட ஒதுக்கீட்டு முறையை பாதிக்காது என உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஷிவானி ஜி, சுருதன்யா பரத்வாஜ் கருத்து.

தி டெலிகிராப்

* 2024 தேர்தலை கணக்கில் கொண்டு தேசிய தலைமைத்துவ மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சமூக நீதியில் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. தாழ்த்தப்பட்டவர்கள், ஓபிசிகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு நிறுவன அமைப்பில் அனைத்து நிலைகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் முடிவைத் தொடர்ந்து, சமூக நீதி நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதே கட்சியின் நோக்கமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

* பொது சிவில் சட்டம் அனைத்து மதப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரே வழி என்பது மோசடி. இச்சட்டத்திற்கும், ஹிந்து ராஷ்டிரத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்கிறார் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்.

-குடந்தை கருணா


No comments:

Post a Comment