சாக்கோட்டை க.உண்மை அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

சாக்கோட்டை க.உண்மை அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

குடந்தை, ஜூலை 14- கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் சகோதரர் க. உண்மை அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 13.7.2023 அன்று குடந்தை சாக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் நடைபெற்றது. 

மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட திரா விட முன்னேற்றக் கழகத் தின் செயலாளருமான சு. கல்யாணசுந்தரம் தலை மை யேற்றார்.

மயிலாடுதுறை நாடா ளுமன்ற உறுப்பினர்  செ. ராமலிங்கம் படத்தினை திறந்து வைத்தார்கள்.

கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார்.

தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழி யன் உட்பட திராவிட முன்னேற்ற கழகத்தின் பொறுப்பாளர்கள்  அனைத்து அரசியல் சமூக இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறவினர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் திரா விடர் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப் பாளர் குடந்தை க. குரு சாமி கலந்து கொண்டார்.

மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழ கத்தின் தலைவர் ஆர்பி எஸ்.சித்தாரத்தன், குடந்தை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் கு. நிம்மதி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அரங்க. வைரமுடி, மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.திரிபுரசுந்தரி, மனுநீதி சோழன் நகர் கழக பொறுப்பாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆ.தமிழ்மணி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் த.ஜில்ராஜ்,  திருவிடைமருதூர் ஒன் றிய தலைவர் எம்.என். கணேசன், கழக பொதுக் குழு உறுப்பினர் வழக்கு ரைஞர் சு.விஜயகுமார், மாநகர கழக செயலாளர் வழக்குரைஞர் பீ. ரமேஷ் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment