ஈரோடு, ஜூலை 27-_23-07.2023 ஞாயிறு முற்பகல் 11 மணியளவில் ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப் பாளையம் கழகக் குடும்பத்தைச் சார்ந்த அ.பொன் முகிலன், வெங்க டாசலபதி ஆகியோரின் தாயார் மறைந்த சீரங்காயம்மாள் படத் திறப்பு நினைவேந்தல் கூட்டம் தலைமைக் கழக அமைப் பாளர் ஈரோடு த.சண்முகம் தலை மையில் நடை பெற்றது.
மாவட்ட துணைசெயலாளர். அ.பாட்டுச்சாமி குடும்ப உறுப்பினர் கள் கண்மணி -ஜெயசங் கரன், கவுதம் பிரபாகரன்- தமிழரசி அறிவுச்செல்வி நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபி வெ.குமாரராஜா சிறப்புரை யாற்றினார்.
மா.மணிமாறன் ஈரோடு மாவட்ட செயலாளர் உரையாற்றினார்.
படத்தைத் திறந்துவைத்து மதிமுக மாவட்டச் செயலாளர் மா.கந்தசாமி நினைவேந்தல் உரை யாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், மாவட்ட செயலாளர் நம்பியூர் மு.சென்னி யப்பன், பொதுக்குழு உறுப் பினர்கள் பாலகிருட்டிணன் ஈரோடு, க.யோகானந்தம், ஈரோடு ப.சத்தியமூர்த்தி, தேவராஜ்
வீ.பார்த்திபன், ஜெயச்சந்திரன், அருள், ம.தி.மு.க.மதியழகன் ஆகி யோர் இரங்கலுரை யாற்றினார்கள். இறுதியாக பொன்முகிலன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment