திருவாரூர், ஜூலை 9 திருவாரூரில் 8.7.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பைபாஸ் சாலை, ரோட்டரி ஹாலில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப் பிக்கப்பட்டனர்.
பயிற்சியில் கல்லூரி அளவில் ஆண்கள் 22 பேர், பெண்கள் 17 பேரும், பள்ளி அளவில் ஆண்கள் 8 பேரும், பெண்கள் 38 பேரும் ஆகக் கூடுதல் 85 பேர் கலந்து கொண்டனர். இவர்களைப் பாராட்டி மாநில பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுரை வழங்கினார். சிறப்பாக குறிப்பெடுத்த மாணவர்களுக்கும், பயிற்சி பெற்றவர்களுக்கும் 'பெண் ஏன் அடிமையானாள்?' 'நீட் தேர்வு எதிர்ப்பு ஏன்?' 'இதுதான் மகாமகம்', 'திராவிடர் கழகத்தில் சேர வேண்டும் - ஏன்?' என்ற புத்தங்களை வழங்கி திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் சிறப்பித்தார். சிறப்பாக குறிப்பெடுத்த மாணவர் சி. மனோஜ், சு. ரெங்கநாயகி, இரா. ஜெயந்தி ஆகியோருக்கு முறையே ரூ.500, ரூ.300, ரூ.200 மதிப்புள்ள புத்தகங்க¬க் ஆசிரியர் தமிழரசன் தனது பரிசாக அளித்து சிறப்பித்தார். பயிற்சியாளர்கள் அனைவருக்கும், பார்வையாளர் களுக்கும் மேனாள் தமிழ்நாடு அரசின் அமைச்சரும், இந்நாள் அரசின் தாட்கோ தலைவருமான உ. மதிவாணன் சிறப்பாக மதிய உணவு விருந்தளித்தார்.
பயிற்சி முகாமில் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், மாவட்ட ப.க. தலைவர் ஈ.வெ.ரா., செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு, நகர தலைவர் எஸ்.வி. சுரேஷ், திருத்துறைப்பூண்டி நகர தலைவர் சு. சித்தார்த்தன், நகர செயலாளர் ப. நாகராசன், திருத்துறைப்பூண்டி, ஒன்றிய தலைவர் ச. பொன்முடி, ஒன்றிய செயலாளர் இரா. அறிவழகன், மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர், இரா. சிவக்குமார், மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் புலவர் ஆறுமுகம், மாநில விவசாய அணி செயலாளர் க. வீரையன், குடவாசல் ஒன்றிய செயலாளர் சி. அம்பேத்கர், திருவாரூர் ஒன்றிய செயலாளர் இராசேந்திரன், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் தங்க. கலிய பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment