திமுக ஆட்சியின் சாதனை : ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை இன்று முதல் வீடு வீடாக படிவம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

திமுக ஆட்சியின் சாதனை : ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை இன்று முதல் வீடு வீடாக படிவம் வழங்கல்

சென்னை, 20 ஜூலை  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி இன்று (20.7.2023) தொடங்குகிறது. 

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் 1 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங் கும் வகையில் 2023-2024 நிதி நிலை யறிக்கையில்  ரூ.7,000 கோடி நிதி ஒதுக் கப்பட்டது. செப்.15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் இத்திட்டம் தொடங்கப் படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆலோ சனைக் கூட்டத்தில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, தகுதிகள், கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டன. ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கி சிறப்பு திட்ட செயலாக்க துறையின்கீழ் அரசாணையும் வெளியிடப்பட்டது. குடும்ப அட்டை, ஆதார் தரவுகள் அடிப் படையில் இத்திட்டப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட் டுள்ளன. 

குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஒருவர் இந்த உரிமை தொகையை பெறலாம். குடும்ப வரு மானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு மின்நுகர்வு 3,600 யூனிட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள், கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தகுதியான ஒரு பயனாளி கூட விடுபடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத் தினார். 

இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படை பணிகளை அனைத்து மாவட்ட ஆட் சியர்களும் தொடங்கியுள்ளனர். வரு வாய், கூட்டுறவு துறைகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. 

முதல்கட்டமாக நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக இதற்கான விண்ணப்பத்தை விநியோ கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஜூலை 24 முதல் ஆக.4 வரை, அடுத்த தாக ஆக.5 முதல் 16-ஆம் தேதி வரை என 2 கட்டங்களாக முகாம் நடத்தி, விண்ணப்பங்களை பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

இதுகுறித்து கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை யில் நேற்று (19.7.2023) நடந்த ஆலோ சனை கூட்டத்தில் பல்வேறு அறிவு றுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, குடும்ப அட்டை அடிப் படையில் நியாயவிலை கடை பணி யாளர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று, விண்ணப்பப் படிவங்கள், முகாமில் பங்கேற்பதற்கான விவரங்கள் அடங்கிய டோக்கன்களை வழங்குகின் றனர். இவ்வாறு விண்ணப்பம் பெற்றுக் கொண்டவர்கள், டோக்கனில் குறிப் பிட்டுள்ள நேரம், இடத்துக்கு சென்று, வங்கி பாஸ்புக் விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி விண்ணப்பத்தை பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment