ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து, 12 கோடி ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ள, NGC 3256 எனும் விண்மீன் மண்டலத்தை ஒளிப்படம் எடுத்துள்ளது. இது பார்ப்பதற்கு உண்மையா என்று சந்தேகத்தை எழுப் பும் விதத்தில், அழகான போட்டோஷாப் சித்திரம் போல் உள்ளது.
வாயுக்கள், நட்சத்திரங்கள், மாசுகளின் சுருள்களாக இந்த இளஞ்சிவப்பு நிற விண்மீன் மண்டலம் அமைந் துள்ளது.
50 கோடி ஆண்டுகளுக்கு முன் இரு பெரும் விண்மீன் மண்டலங்கள் கடுமையாக மோதிக் கொண்டதன் விளைவாக, இது உருவாகியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த விண்மீன் மண்டலத்தின் உருவாக்கத்தைப் பற்றி ஆராயும்போது, நம்முடைய பால்வெளி மண்டலம் மற்றொரு விண்மீன் மண்டலத்தோடு மோதும்போது எப்படி வளரும் என்று அறிய உதவும்.
அதோடு இதன் வாயிலாக பெரும்பாலான விண்மீன் மண்டலங்களின் மய்யத்தில் இருக்கும் கருந்துளைகள், சூரியனின் பருமன் போன்று கோடி மடங்கு பருமனாக வளரும் இரகசியம் பற்றியும் அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment