1970களின் மத்தியில் தான் வலது கையை உயர்த்தி அய்ந்து விரல் களையும் பிரித்து உதயசூரியன் போல காட்டும் வழக்கம் கலைஞருக்கு வந்தது.
கலைஞர் அப்படி அய்ந்து விரல் களை பிரித்து காட்டுவதை பற்றி எம்.ஜி.ஆர். கிண்டல் அடித்தார்.
"நான் பஞ்சமா பாதகன்" என்று சொல்லாமல் சொல்லுகிறார் கருணா நிதி என்று காலையில் பேசினார்.
அன்று இரவு சென்னையில் கலைஞரின் பொதுக் கூட்டம் ஒன்று...
வழக்கமான இவர்களே, அவர் களே, என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என்ற துவக்கமும் இல் லாமல் கலைஞர் சொன்னார்..
அய்ந்து விரல்களை காட்டுகிறார் கருணாநிதி.
பஞ்சமா பாதகன் என்று சொல் லாமல் சொல்கிறார் என்று நண்பர் எம்.ஜி.ஆர். சொன்னார்.
தமிழ் இலக்கியம் அறிந்திருந்தால் அய்ம்பெருங்காப்பியங்கள் நினை வுக்கு வந்திருக்கும்.
தொல் காப்பியம் தெரிந்திருந்தால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற அய்வகை தினைகள் நினைவுக்கு வந்திருக்கும்..
மகாபாரதம் படித்திருந்தால் பஞ்ச பாண்டவர் நினைவுக்கு வந்திருப்பர்..
சங்கீதம் அறிந்தவர் என்றால் தியாகய்யரின் பஞ்ச ரத்ன கீர்த்தனை நினைவுக்கு வந்திருக்கும்..
ஆனால் நண்பருக்கு பஞ்சமா பாதகம் நினைவுக்கு வந்திருக்கிறது" என்று சொல்லி நிறுத்தினார்..
ஆரவாரம் அடங்க வெகு நேரமாயிற்று.
பிறகு ஆராம்பித்தார் அந்த அவர்களே, உடன் பிறப்புகளே என்று....
அது தான் நினைவுக்கு வருகிறது.
I. N. D. I. A.என்று எதிர்கட்சிகள் அணிக்கு பெயர் வைத்து பத்து நாள் கடந்த பிறகு நரேந்தர் தாமோதரனுக்கு East India company நினைவுக்கு வந்திருக்கிறது..
அவருக்கென்ன...மகானுபாவர்..
கார்ப்பரேட்டுகளுடன் குலாவு பவர்..
I. N. D. I. A. என்றால் கம்பெனி நினைவு தான் வரும்..
சுதந்திர போராட்ட வீரர் என்றால், போராட்ட வரலாறு படித்தவர் என்றால் Quit India நினைவு வந்திருக்கும்...
பாரத் மாதா கி ஜே என்ற முழக்கம் ஆத்மார்த்தமாக இருந்தால் East India company நினைவுக்கு வருமா?
நன்றி :- @vinu mohan Karunakaran Ananth
என்ன ஒரு கீழ்த் தரமான பேச்சு? INDIA என்ற நம் நாட்டின் பெயர் எத்தனையோ ஆயிரம் நிறுவனங் களின் பெயரில் கலந்திருக்கிறது - இந்தியன் நேஷனல் காங்கிரஸ், இந்தியன் ரெயில்வேஸ், ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா, இதர பாங்குகள், ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இண்டியா, ஃபர்டிலைசர் கார்பரேஷன் ஆஃப் இண்டியா, இந்தியன் ஆர்மி, இந்தியன் ஏர் ஃபோர்ஸ், இந்தியன் நேவி, ---- இது ஒரு நீண்ட பட்டியல். இந்தியா தவிர பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் என்ற பெயரிலும் பல.
ஆனால் இந்த 56 இஞ்ச் மஹா புருஷருக்கு கண்ணுக்குத் தெரிவது ‘ஈஸ்ட் இண்டியா கம்பெனியும்’ ‘இந்தியன் முஜாஹிதீனும்’ தான். இது குறைப்பார்வை கூட இல்லை. திரிந்த பார்வை. திருட்டுப் பார்வை.
இது இப்படி ஒரு சரியான பெயரிட்டதைக் கண்டு இவரும் இந்தக் கேடு கெட்ட கும்பலும் மிரண்டு போயிருப்பதைத் தான் காட்டுகிறது.
-கோ.கருணாநிதி
No comments:
Post a Comment