சென்னை,ஜூலை 28 - இந்தியாவில் முதன்முறையாக சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள காவேரி மருத்துவ மனை, ‘எக்கோ வழிகாட்டலுடன் இதயத்திற்குள் லாம்ப்ரே இடது இதய மேலறை துணை உறுப்பு (LAA) அடைப்பு செயல்முறையை செய்து’ சாதனை படைத்துள்ளது. இடது இதய மேலறை துணை உறுப்பு அடைப்பு என்பது இடது இதய மேலறையின் தசை சுவரில் உள்ள ஒரு சிறிய திசுப்பையை (லிகிகி) மூடுவதற்கான ஒரு அறுவைசிகிச்சை சார்ந்த அல்லது மிகக்குறைவான ஊடுருவல் உள்ள ஒரு மருத்துவ செயல்முறையாகும்.
80 வயதான நபர் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, நீரிழிவு மற்றும் அதிக ரத்த அழுத்தம், குடற்புண் மற்றும் உறக்கத்தில் சுவாசத்தை தடை செய்யும் பிரச்சினை, ஏட்ரியல் குறுநடுக்கம் மற்றும் ஒரு சிறிய அளவிலான பக்கவாத பாதிப்பு என பல பாதிப்புகள் உடன் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 80 வயதான இந்நபருக்கு ஏற்கெனவே மிகப்பெரிய அளவில் குடலில் இரத்தக்கசிவு நிகழ்வு ஏற்பட்டிருந்ததால் எல்ஏஎம்பிஆர்இ என அழைக்கப்படும் இடது மேலறை துணை உறுப்பை (திசுப் பையை) மூடும் சிகிச்சை செய்யப்பட் டது. காவேரி மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்களான ராஜாராம் அனந்தராமன், தீப் சந்த் ராஜா மற்றும் குழுவினரின் இதயத்துக்கு உள்ளே எக்கோ வழிகாட்டலின் உதவியோடு எல்ஏஎம்பிஆர்இ சாதனம் வெற்றி கரமாக பொருத்தப்பட்டது. ரத்த அடர்த் தியை குறைக்கும் மருந்துகள் எதுவு மின்றி இச்சிகிச்சை முடிந்த 2ஆவது நாளன்றே இந்த நோயாளி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தீப்சந்த் ராஜா கூறியதாவது: 80 வயதான இந்நோயாளி, எல்எஎ அடைப்பு மற்றும் இதயத்திற்குள் எக்கோ என்ற இரு தொழில்நுட்பங்களின் வழியாக ஆதாயம் பெற்றிருக்கிறார். இந்த மய்யத்தில், மேற்கொள்ளப்படும் இதயத்திற்குள் எக்கோ தொழில்நுட்பத் தினால், இதயத் துடிப்பு பிரச்சினையுள்ள அதிக நோயாளிகள் சிகிச்சை பலனை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment