விருதுநகர், ஜூலை 12- வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழாய் வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப் பட்டுள்ளது.
இந்த பொம்மை கருப்பு நிறத்து டன் வடிவமைக்கப் பட்டுள்ளது. தலை அலங் காரமும், உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் அமைந்த கண்களும், அவற்றின் புருவங்களும் கீரல் வடிவில் வரையப்பட்டுள்ளது.
வாய், மூக்கு, காதுகள், தடிமனாக உருவாக்கப்பட் டுள்ளது. இதுவரை 12 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 2,452 பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு போன்று அதிக பொருட்கள் கிடைத்து வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment