கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.7.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

👉மணிப்பூர் வன்முறை காரணமாக அம்மாநில முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளு மன்றத்தில் பேச்சு.

👉மணிப்பூரில் இரு பழங்குடி பெண்களை நிர்வாண ஊர்வலம் குறித்த காட்சிப்பதிவை சமூக வலைத் தளங்களில் நீக்கிட மோடி அரசு உத்தரவு.

👉 மணிப்பூர் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

👉ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக டில்லி அரசு தாக்கல் செய்த வழக்கு நேற்று (20.7.2023) விசார ணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வழக்கை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மகனின் 100 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான சொத்துப் பதிவை ஆவணங்களில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉அரசமைப்புச் சட்டத்தை மீறியதாக தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக  நாடாளு மன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் கோரிக்கை.

தி இந்து:

👉ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி தகவல் ஒளிபரப்பு  அமைச்சகம், அதன் ஊடகப் பிரிவுகள் மற்றும் நிறுவனங் களில் 1,841 காலியிடங்கள் உள்ளதாக மோடி அரசு அறிவிப்பு.

தி டெலிகிராப்:

👉 மணிப்பூர் காணொலி - இது தேசத்திற்கு அவமானம் அல்ல, பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்று ராகுல் காந்தி கண்டனம்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment