10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரளுகின்றனர்!
வடலூர் வள்ளலார் மக்கள் இயக்கம் சார்பில் "வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு" 7.7.2023 வெள்ளி மாலை வடலூர் பேருந்து நிலையத் திடலில் நடைபெற உள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திரா விட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக் குரைஞர் அருள்மொழி, தமிழக வாழ் வுரிமைக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தி.திருமால்வளவன், மதிமுக பொருளாளர் பொறியாளர் மு.செந்தில் அதிபன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில கட்சி கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம் ஆகி யோர் பங்கு பெற உள்ளனர்.
மழையூர் சதாசிவம் குழுவினரின் சன்மார்க்க இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது சன்மார்க்க அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற உள்ளனர். மாவட்டம் முழுவதும் இருந்து ஏராள மான பொதுமக்கள், சன்மார்க்கிகள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாநாட் டில் கலந்து கொள்ள உள்ளனர் முனைப் பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சன்மார்க்கிகளுடன் இணைந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், வடலூர் திராவிடர் கழகத் தலைவர் புலவர் ராவணன், செயலாளர் குணசேகரன், அமைப்பாளர் முருகன், மாவட்ட தலைவர் தண்ட பாணி, மாவட்ட அமைப்பாளர் மணி வேல், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ராமநாதன் ஆகியோர் மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர் சுற்றுவட்டார கிராமங்களில் சிறப்பான விளம்பரப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment