கேள்வி: ‘பனகல் அரசர் வழி நடந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்' என்று ஸ்டாலின் உறுதி கூறுகிறாரே?
பதில்: 1922 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர், கும்பகோணத்தைச் சேர்ந்த டி.சதாசிவ ஐயரை ஹிந்து சமய அற நிலையத் துறையின் தலைவராக நியமித்தார்(1). அவர் வழியை பின்பற்றும் ஸ்டாலின் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு எந்த ஐயரை நியமிக்கப் போகிறார்?
(1) https://en.wikipedia.org/wiki/T._Sada siva_Iyaer#cite_ref-satyamurtip53_6&0.
‘துக்ளக்' 2.8.2023, பக்கம் 9
‘துக்ளக்' கும்பலுக்கு எப்பொழுதுமே தங்களவாள் பற்றியே சதா நினைப்பு! அதே பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் தான் தனியார் கொள்ளையடித்த கோவில்களை எல்லாம் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தார் என்பதும், மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்ற நிபந்தனை யைத் தூக்கி எறிந்தார் என்பதும் குருமூர்த்தி அய்யர் கும்பலுக்குத் தெரியுமா?அரசு தேர்வாணையம், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குழு அமைத்தது, இப்படி பார்ப்பன ஆதிக்கத்தை நறுக்கினார் பனகல் அரசர் என்பதையும் குருமூர்த்திகள் தெரிந்துகொள்ளட்டும்!
No comments:
Post a Comment