மயிலாடுதுறை, ஜூலை 2- மயிலாடு துறை மாவட்டம் செம்பனார் கோயிலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டம் நன்றிப் பெருக்கோடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழகத்தில் சார்பாக 01-07-2023 அன்று மாலை ஆறு மணியளவில் செம்பனார் கோயில் மேலமுக்கூட்டு அண் ணாசிலை அருகில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற் றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா அன்பு-அருள் சங் கமம் குழுவினரின் பெரியார் இன் னிசை நிகழ்வோடு தொடங்கியது.
கலைக்குழுவினரின் 90 நிமிட பெரியார் இசை மழை தோழர்களை உற்சாக வெள் ளத்தில் ஆழ்த்தியது. 60 நிமி டம் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு திரளாகப் திரண்டிருந்த பொதுமக்களின் வேண்டு கோளுக்கிணங்க 90 நிமிடம் வரை நீடித்தது.
மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ் அறிமுக உரை யாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாவட்ட திராவிடர் கழகத் துணைத்தலைவர் வெ. அன் பழகன் தலைமையேற்க மயி லாடுதுறை மாவட்ட கழக அமைப்பாளர் ஞான. வள்ளு வன், குத்தாலம் ஒன்றியத் தலை வர் சா. முருகையன் மயிலாடு துறை ஒன்றியத் தலைவர் ஆர். டி.வி.இளங்கோவன் சீர்காழி ஒன்றியத் தலைவர் சா. சந்திர சேகரன், கொள்ளிடம் ஒன்றி யத் தலைவர் பி. பாண்டியன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி முத்து, நகரச் செயலாளர் பூ.சி. காமராஜ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். செம்பனார் கோயில் ஒன்றியத் தலைவர் டி. கனகலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
வைத்தீசுவரன்கோயில் நகர கழக தலைவர் வி.ஆர்.முத் தையன் தொடக்க உரையாற்ற, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சாமிதுரை, மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், திமுக மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.எஸ். கருணா ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து இறுதியாக கழக பேச்சாளர் இரா. பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டையும் முத்தமிழறி ஞர் கலைஞரின் நூற்றாண்டை யும் இன்றைக்கு நாம் கொண் டாட வேண்டிய அவசியத்தை விரிவாக விளக்கினார். சுயமரி யாதை இயக்கத்தில் தொடங்கி நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் கட்டிக்காத்த சமூக நீதிக்கு பாஜக - ஆர்.எஸ் எஸ் பரிவாரங்களால் இன்றைக்கும் ஏற்படும் அபாயங்களை எடுத் துரைத்தார்.
ஆளுநர் ரவியின் ஆர்.எஸ்.எஸ். மனப்போக்கு நடவடிக் கைகளை தோலுரித்த அவர், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு ஆளுநர் தொடர்ந்து கொடுத்து வரும் தொல்லை களையும் கண்டித்து இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மானால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வைத் தோற்கடிப்பது ஒன்றே வழி என்றார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட செம்பை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எம். அன்பழகன், செம்பை தெற்கு ஒன்றிய திமுக செய லாளர் எம். அப்துல்மாலிக், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜய குமார், பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் ஆகி யோருக்கு மாவட்ட தலைவர் குணசேகரன் சால்வை அணி வித்தார்.
விழா சிறப்பாக அமைவ தற்கு பல வகையிலும் ஒத்து ழைத்த திமுக தகவல் தொழில் நுட்ப அணி மண்டலச் அமைப்பாளர் எம்.சிறீதர் அவர்களுக்கு மாவட்ட செய லாளர் கி.தளபதிராஜ் சால்வை அணிவித்து 'வரலாற்றில் இவர் கள்' புத்தகத்தை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட இளை ஞரணி தலைவர் க.அருள்தாஸ், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ.பாண்டுரங்கன், குத்தாலம் ஒன்றியச் செயலா ளர் கு.இளமாறன், துணைச் செயலாளர் தி.சபாபதி, சீர்காழி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. செல்வம், வைத்தீசுவரன் கோயில் நகர கழக செயலாளர் இரா. இராசேந்திரன், மயிலாடு துறை நகரத் துணைத் தலைவர் இரெ.புத்தன், தங்க.செல்வ ராஜ், மற்றும் திமுக பொறுப்பா ளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment