ஜிஎஸ்டி வசூல் : தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்துக்கு மூன்றாம் இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

ஜிஎஸ்டி வசூல் : தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்துக்கு மூன்றாம் இடம்

ஒன்றிய அரசின் உதவியோ பட்டை நாமம்

சென்னை,ஜூலை 5- ஜிஎஸ்டி வருவாய் வசூலில் கடந்த 2022-_2023ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலம் தேசிய அள வில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் கே.பாலகிஷன் ராஜு வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

ஒன்றிய அரசு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுகம் செய்ததன் 6ஆம் ஆண்டு தற்போது கொண்டாடப்படுகிறது. இது நம்நாட்டில் செய்யப்பட்ட மிகப் பெரிய வரி சீர்திருத்தம் ஆகும். இதன்மூலம், ஒவ்வொரு குடிமகனுக் கும் சிறப்பான மற்றும் எளிமையான வரி என்ற குறிக்கோள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி ஜிஎஸ்டி மண்டலத்தில் ஜிஎஸ்டி செலுத் துவோர் 4.57 லட்சம் பேர் உள்ளனர். இந்த மண்டலம் கடந்த 2022-_2023ஆம் நிதி ஆண்டில் அகில இந்திய ஜிஎஸ்டி வருவாயில் 8.12 சதவீதமும், அகில இந்திய கலால் வருவாயில் 4.72 சதவீதமும் பங் களிப்பை வழங்கி உள்ளது. நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் முந்தைய ஆண்டை விட 2022-_2023ஆம் ஆண்டில் 21 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத் தில் இந்த வருவாய் 19 விழுக்காடு அதிகரித் துள்ளது. இதன்மூலம், கருநாடகா, மகாராட்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, புதுச் சேரி மண்டலம் தேசிய அளவில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையாக 2022-_2023ஆம் ஆண்டில் ரூ.5,771 கோடி வழங்கப்பட்டுள்ளது. முந் தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27 விழுக்காடு அதிகம்.

3 ஆயிரம் போலி பதிவுகள்

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத் தில் உள்ள 3 தணிக்கை ஆணையரகம் மூலம் 2022_-2023ஆம் ஆண்டில் ரூ.288 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக் கப்பட்டு உள்ளது. போலி ஜிஎஸ்டி பதிவுகளை கண்டுபிடிக்க, கடந்த மே மாதம் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், 3 ஆயிரம் போலி ஜிஎஸ்டி பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment