டெங்கு காய்ச்சல், மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், ஜிகா வைரஸ் தொற்று முதலிய கொடிய நோய் களைப் பரப்புவதற்குக் கொசுக்கள் காரணமாக அமைந் துள்ளன. இன்றைய நிலையில் காலநிலை மாற்றம், நகரமய மாக்கல் கொசுக்களின் வாழ்விடத்தை விரிவு படுத்தியுள்ளன. இது ஏராளமான மக்களுக்கு நோயைப் பரப்ப வழி செய் துள்ளது.
வழக்கமாக, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை மனிதர் களுக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இப்போது ஆராய்ச்சியாளர்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் கொசுக்களை அழிப்பதற்கான ஒரு வழியை உருவாக் கியுள்ளனர்.
‘சர்பாக்டன்ட்கள்’ என்பவை மேற்பரப்பு அழுத்தத் தைக் குறைக்கும் நீர் எதிர்ப்பு தண்ணீரை ஈர்க்கும் பகுதிகளைக் கொண்ட மூலக்கூறுகள். சோப்புகள், அழகு சாதனப் பொருட்களில் இவை பரவலாகப் பயன் படுகின்றன.
மனிதர்களுக்குப் பாதுகாப்பானவையாகக் கருதப் படும் பல சர்பாக்டன்ட்களைக் கொசுக்கள் மீது பரிசோதிக் கத் துவங்கினர். ‘ஸ்பைராக்கிள்ஸ்’ எனப்படும் சிறிய துளைகள் வாயி லாக கொசுக்கள் சுவாசிக்கின்றன.
மிகக் குறைந்த மேற்பரப்பு அழுத்தம் கொண்ட ‘சர்பாக்டன்ட்’ கரைசல்களைத் தெளித்தபோது கொசுக்கள், அவற்றின் சுவாசக்குழாய்கள் அடைபட்டு, மூச்சு விட முடியாமல் கீழே விழுந்து இறந்தன.
தெளிப்பான்கள் வாயிலாக, ‘சர்பாக்டன்ட்’களைக் கொசுக்கள் மீது தெளிப்பதே சிறந்த வழி என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment