மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஜூலை 4- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘திராவிட மாடல்' அரசின் செயல்திறனுக்கான சிறிய எடுத்துக்காட்டுதான் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் எனும் இந்தச் சாதனை. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டினை உயர்த்தி, தெற்காசியாவின் முதலீட்டு மய்யமாக தமிழ்நாட்டை ஆக்கிட உழைக்கிறோம். தொடர்ந்து அதற்கான வாய்ப்பு களை ஆராய்ந்து அவற்றில் சிறந்து விளங்கிடுவோம். - இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்


No comments:

Post a Comment