மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 14 - மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 1 முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயி லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.6000 ஆகவும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.4000-லிருந்து 8000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6000-லிருந்து ரூ.12000 ஆகவும் தொழிற்கல்வி மற்றும் முதுகலை படிப்பு மாணவர்களுக்கு ரூ.7000-லிருந்து ரூ.14,000 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment