பாட்னா, ஜூலை 28 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவிவரும் நிலையில், பீகார் மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் வினோத் சர்மா கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அனுப்பியுள்ளார். இவரது பதவி விலகல் தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பீகார் பாஜக தலைவர் வினோத் சர்மா, மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் என் பிரேன் சிங் கட்சியில் இருந்து பதவி விலகியுள்ளார். பதவிவிலகலுக்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில செய்தி தொடர்பாளர் வினோத் சர்மா, “மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் தான் தான் பதவி விலகக் காரணம். மணிப்பூர் முதலமைச்சர் 80 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும், முதலமைச் சரை பிரதமர் பதவி நீக்கம் செய்யாததாலும் இந்தியா அவமானமடைந்துள்ளது. பிரதமர் மோடி இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார். மணிப்பூர் முதல மைச்சர் பைரன் சிங்கை பதவியிலிருந்து நீக்கும் தைரியம் பிரதமருக்கு இல்லை.
ஒரு மனிதனாக என்னால் மணிப்பூரில் நடப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் கனத்த மனதுடன் பாஜகவிலிருந்து விலகுகிறேன். தேசத்தை நேசிப்பதாகவும், பெண் குழந்தைகளை காப்பாற்றுவதாகவும், இந்திய சனாதன கலாச்சாரத்தை காப்பாற்றுவதாகவும் பாசாங்கு செய்யும் பிஜேபியில் பணிபுரிவதால் களங்கம் அடைந் துள்ளேன். பிரதமர் மோடிக்கு மனிதாபிமானம் கொஞ்சமாவது இருந்திருந்தால், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்திருப்பார் அல்லது பிரதமர் பதவியிலிருந்து விலகி இருப்பார். எனவே எனது பதவி விலகல் கடித்தத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment