கலைஞரின் நூற்றாண்டு விழா - சென்னை மாநில கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

கலைஞரின் நூற்றாண்டு விழா - சென்னை மாநில கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜூலை 20- கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாநிலக் கல்லூரியில் 22.7.2023 அன்று மாபெரும் தனி யார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது. இதுகுறித்து, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் கோ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிக்கை:

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தமிழ்நாடு முழுவ தும் 100 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 

முதலாவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர், சி.என்.சி. ஆப்ரேட்டர் போன்ற அய்.டி.அய், தொழில் கல்வி பெற்ற வர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புப் பெற லாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment