மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்ற ஆளுநர் மீது சட்ட நடவடிக்கை: கேரள அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்ற ஆளுநர் மீது சட்ட நடவடிக்கை: கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம், ஜூலை 9 - சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களுக்கு பல மாதங் களாக ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. கேரள அரசுக்கும், மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன் கேரள சட்டமன் றத்தில் லோக் ஆயுக்தா சட்டத் திருத்த மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக் கும் மசோதா உள்பட 6 மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை ஆளுநர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதில் கையெழுத்து போட முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். கேரள அரசு பலமுறை வலியுறுத்தியும், 4 அமைச் சர்கள் நேரடியாக சென்று விளக் கம் அளித்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்து விட்டார். சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது ஏற் கத்தக்கதல்ல என்று முதலமைச் சர் பினராயி விஜயன் பலமுறை வெளிப்படையாகவே கூறினார்.

இந்நிலையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட கேரள அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அட்வகேட் ஜென ரலுடன் கேரள சட்டத்துறை செயலாளர் ஆலோசனை நடத் தினார். இந்த ஆலோசனையின் படி விரைவில் ஆளுநருக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தை நாட கேரள அரசு தீர்மானித்துள்ள தாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலங்கானா அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment