அரியலூர், ஜூலை 26- அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 23.7.2023 ஞாயிறு மாலை 5 மணிக்கு தொடங்கி சிறப்பாக எழுச்சியோடு நடை பெற்றது.
அரியலூர் மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன் தலைமை யேற்க, அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.ஜி மணிகண்டன் வர வே ற்புரையாற்றினார்.மாவட்ட காப்பாளர் சு. மணிவண்ணன், விளாங் குடி ஊராட்சி மன்ற தலைவர் துரை. இளவர சன், ஒன்றியக்குழு உறுப் பினர் ரேவதி கார்த்தி கேயன், மாவட்டத் துணைத் தலைவர் இரா. திலீபன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார், இரத்தின. இராமச்சந்தி ரன், ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் த. செந்தில், மதிமுக ஒன்றிய துணை செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரியலூர் அல்லிநகரம் பாடகர் சீனி .அறிவு மழை கொள்கை விளக்க பாடல்களை பாடினார்.
பெரம்பலூர் விஜயேந் திரன் மந்திரமா? தந்தி ரமா? நிகழ்ச்சிகளை சிறப் பாக செய்து காட்டினார். மதிமுக மாவட்ட செய லாளர் க. ராமநாதன், மாவட்டத் தலைவர் விடு தலை. நீலமேகம், தலைமை கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் ஆகி யோர் உரையாற்றியதற்கு பின்னர் கழகப் பேச்சா ளர் இராம. அன்பழகன் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவின் சிறப்புகளையும் முத்தமி ழறிஞர் கலைஞரின் சிறப் புகளையும், திராவிட இயக்கம் பரப்பி வரும் பகுத்தறிவு சமூக நீதி கருத்துகளை நகைச்சுவை யோடு பொதுமக்கள் மத் தியிலே விளக்கி சிறப்பு ரையாற்றினார்.ஒன்றிய இளைஞரணி செயலா ளர் கி.கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
விளாங்குடி கிராமம் முழுவதும் கழகக் கொடி கள் கம்பீரமாக பறந்தது. இயக்கத்தின்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட உள்ளூர் பிர முகர்கள் பாராட்டி மகிழ்ந் தனர்.அனைவருக்கும் உணவு வழங்கி தோழர் கள் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment