எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி அவதூறு? நிதிஷ்குமார் பதிலடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி அவதூறு? நிதிஷ்குமார் பதிலடி!


பாட்னா,ஜூலை20
- பெங்களூரு வில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி அடைந்ததாக வெளியான தகவலுக்கு நிதிஷ் குமார் விளக்கம் அளித்தார்.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. இது தொடர் பாக எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலேசானை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது.

அதை தொடர்ந்து, 2ஆவது கூட்டம் கருநாடகா தலைநகர் பெங்க ளூருவில் 18.7.2023 அன்று நடந்தது. இதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பிறகு எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.

இது குறித்து பேசிய பா.ஜ.க. தலை வர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறினார்.

ஆனால் நிதிஷ் குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறோம்.

உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. 

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும்" என கூறினார்.

No comments:

Post a Comment