புதிய காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 22, 2023

புதிய காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை, ஜூலை 22  கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை மற்றும் தீவிரமான குற்ற வழக்குகளை திறமையாக கையாள சிறப்புப் பிரிவைஏற்படுத்த வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநருக்கும்,  மாநகர காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதி மன்றம் கடந்த மாதம் உத்தரவிட் டிருந்தது. 

இது தொடர்பான வழக்கு விசா ரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (21.7.2023) நடந்தது. அப்போது, மாநில அரசு தலைமைகுற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘தீவிரமான குற்ற வழக்குகளை திறமை யாக கையாள ஏதுவாக டிஜிட்டல் எவிடன்ஸ் மேனுவல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரிவாக தயாரிக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக 12 காவல் நிலை யங்களில் தனிபுலன் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது அரசு குற்றவியல் வழக்குரை ஞர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறித்தும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’’ என விளக்கம் அளித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்  சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், இந்த வழக்குகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்புக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் செப்.22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment