குற்றாலம் பயிற்சி முகாமில் ’இந்துத்வ’ சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார் ஆசிரியர்!
தென்காசி, ஜூலை 1- குற்றாலம் பயிற்சி முகாமின் மூன்றாம் நாளில் 7 வகுப்புகள் நடைபெற்றன. அதில் ’இந்து - இந்துத்வா - சங்பரிவார் - ஆர்.எஸ்.எஸ்’. எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பாடம் நடத்தினார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் தேர்வு நிலை பேரூராட் சியில் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரையிலான நான்கு நாட்கள், வீகேயென் மாளிகையில், ”பெரியாரியல் பயிற்சிப் பட்டறை” நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான 30.6.2023 அன்று காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி வரை மொத்தம் 7 வகுப்புகள் நடைபெற்றன.
முதல் வகுப்பை, பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி’ என்னும் தலைப்பில் துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், இந்து - இந்துத்வா - சங்பரி வார் - ஆர்.எஸ்.எஸ்.’ எனும் தலைப்பில், இரண்டாம் வகுப்பை தமிழர் தலைவர் ஆசிரியர், ’திராவிடர் இயக்கத்தின் தமிழ்த்தொண்டு’ என்னும் தலைப்பில், மூன்றாம் வகுப்பை பேராசிரியர் காளிமுத்து, ’தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்’ என்னும் தலைப்பில், நான்காம் வகுப்பை துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ‘பெரியாரின் தொலைநோக்குப் பார்வை’ என்னும் தலைப்பில், நான்காம் வகுப்பை துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், ‘கடவுள் மறுப்புத் தத்துவம்’ என்னும் தலைப்பில், அய்ந்தாம் வகுப்பை முனைவர் க. அன்பழகன், ‘சமூகநீதிக்கான சவால்களும் - தனியார் துறையில் இட ஒதுக்கீடும்’ என்னும் தலைப்பில், ஆறாம் வகுப்பை முனைவர் வா.நேரு ஆகியோர் நடத்தினர். இறுதியாக ஏழாம் வகுப்பாக ‘தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது பகுத்தறிவா? இனநலமா?’ என்னும் தலைப்பில் சுவையான பட்டிமன்றம் நடைபெற்றது.
பயிற்சியின் முக்கியத்துவத்தை
உணர்ந்த மாணவர்கள்!
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் தொடர்ந்து மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை வலியுறுத்தி, முதல் நாளை விட இரண்டாம் நாளில் மாணவர்களின் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூன்றாம் நாளில் மாணவர்கள் நன்றாகவே பயிற்சிப் பட்டறையின் அருமையை புரிந்து கொண்டு நன்றாக ஒத்துழைத்தனர். கழகக் காப்பாளர் தூத்துக்குடி பால்ராஜேந்திரம் அவ்வப்போது வருகைப்பதிவு எடுத்து மாணவர்களின் வருகையை சரிபார்த்தார். தோழர் சோ.சுப்பையா வழிகாட்டுதலில், உணவு தயாரிக்கும் தோழர் கள், ஓட்டுநர்கள் உள்பட பலரும், மாணவர்களுக்கு பின் தூங்கி, முன்னெழுந்து பணியாற்றி வருகின்றனர்.
தன்னம்பிக்கை; தன்மானம்; தன்னிறைவு!
தமிழர் தலைவர் ஆசிரியர் தனது வகுப்பில், வீகேயென் கண்ணப்பன் அவர்களின் தன்னலமில்லாத தொண்டினை நினைவுகூர்ந்தார். அன்னார் மறைந்த பின்னும், அவரது வழித்தோன்றல் விகேயென் கேப்டன் ராஜா அந்தத் தொண்டை தொடர்வதை நன்றியோடு நினைவு கூர்ந்தார். அப்போது மேடையில் ஆசிரியரின் பக்கத்தில் அமர்ந்திருந்த விகேயென் பாண்டியன் உணர்ச்சிவயப்பட்டு, ஆசிரியரை பார்த்தபடி இருந்தார். அதைத்தொடர்ந்து ஆசிரியர்-மாணவர் களுக்கு தன்னம்பிக்கை தேவை! தன்னம்பிக்கை இருந்தால் தன்மானம் வளரும்! தன்மானம் வளர்ந்தால் தன்னிறைவு ஏற்படும்’ என்று ஆலோசனை சொன்னார். மாணவர்களுள் பட்டதாரிகள் 50, பட்டயதாரிகள் 5, பள்ளிக்கல்வியில் பயில்ப வர்கள் 31 என மொத்தம் 86 பேர் என்பதை அறிந்த ஆசிரியர் மகிழ்ந்தார். அதையொட்டி, கல்விக்கே கடவுளாக சரஸ்வதி இருந்த நாட்டில், பாட்டி சரஸ்வதி கைநாட்டு! பேத்தி சரஸ்வதி மருத்துவர் எப்படி? என்று கேள்வி எழுப்பி, திராவிட இயக்கத்தின் அருமையை சுருக்கமாக எடுத்துரைத்தார்.
இந்துத்வாவின் நோக்கம்
ஹிந்து ராஷ்டிரம்!
அதைத் தொடர்ந்து தலைப்புக்கு வந்த ஆசிரியர், இந்து மதம் என்றே ஒன்று கிடையாது. வேத மதம், சனாதன மதம் தான் அதன் உண்மைப் பெயர் என்றார் எடுத்த எடுப்பிலேயே! அதற்கு, ’இல்லாத இந்து மதம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் இறையன் எழுதிய புத்தகத்தை நினைவு கூர்ந்து விட்டு, ‘வர்ணாஸ்மரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் தத்துவம் தான் இந்துத்வா’ என்று தலைப்புக்கு இலக்கணம் சொன்னார். மேலும் அவர், சமத்துவத்தை சமூகநீதியின் மூலம் அடைய நினைக்கும் நமது முயற்சியை ஒழிக்க வந்தது தான் இந்துத்வா என்று அதன் ஆபத்தை உணர்த்தினார். இந்துத்வாவின் நோக்கம் ’ஹிந்து ராஷ்டிரம்’ அதை அடை வதற்கான வழிமுறைகள் என்ன? என்று கேள்வி கேட்டு, ’ஒரே நாடு இந்தியா; ஒரே மொழி சமஸ்கிருதம்; அதுவரை ஹிந்தி’ என்பதுதான் அது என்று பதிலும் சொன்னார். 2014 இல் ஜூம்லா வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, 2025 க்குள் ’ஹிந்து ராஸ்டிரம்’ அமைக்கும் பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று வரவிருக்கும் ஆபத்தை துல்லியமாகப் புரியவைத்தார்.
பட்டையைக் கிளப்பிய பட்டிமன்றம்!
இறுதியாக, ’தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது பகுத்தறிவா? இனநலமா?’ என்ற தலைப்பில், பயிற்சி மாண வர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. ’பகுத்தறிவே’ எனும் தலைப்பில் தேவராஜ் பாண்டியன், சமிக்சா, வெங்க டேஷ், தமிழிசை ஆகிய நால்வரும், ‘இனநலமே’ எனும் தலைப்பில் ஆஷா, ஆதவன், மோகன்ராஜ், சமரசம் ஆகிய நால்வரும் தங்கள் வாதங்களை சிறப்பாக எடுத்து வைத்தனர். முதன் முதலாக பட்டி மன்றத்தில் பேசுவது போலில்லாமல், மேடைக் கூச்சமின்றி, சரளமாக கருத்துச் செறிவுடன் மாண வர்கள் பேசி அசத்தினர்.
முன்னதாக முனைவர் க. அன் பழகன் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார். நடுவராக பொறுப்பேற்று இருந்த பேராசிரியர் பா. காளிமுத்து, மாணவர்கள் தொட்ட முக்கியமான கருத்துகளில் விடுபட்ட அரிய உண்மைகளை எடுத்துரைக்க, இரண்டு பக்கமும் சிறப் பாகப் பாராட்டி, ’ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளூடே தான் தந்தை பெரியார் நம் இனநலனை மீட்டுத் தந்தார். அவர் எந்தப் பற்றும் இல்லாதவர்; மானுடப்பற்றைத் தவிர! ஆகவே தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது பகுத்தறிவே!’ என்று தீர்ப்பளித்தார். பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு சிறப்பாக கருத்துகளை எடுத்து வைத்த மாணவர்களுக்கு, விகேயென் குற்றாலம் நிர்வாகி தோழர் வைத்தியலிங்கம் ரூ. 1000 மதிப் புள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அப்புத்தகங் களை ஆசிரியர் அம்மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை சிறப்பிப்பார்!
கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!
கழகப் பொருளாளர் வீ. குமரேசன், மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. குணசேகரன், கழகக் காப்பாளர் டேவிட் செல்லத் துரை, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன், மாவட்டச் செயலாளர் முருகன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் கே.டி.சி. குருசாமி, மாநில மாணவர் கழகச் செயலாளர் செந்தூர்பாண்டியன், பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் அழகிரிசாமி, பெரியார் மருத்துவக் குழுமத் தலை வர் மருத்துவர் கவுதமன், வீகேயென் பாண்டியன், வெற்றிச் செல்வி, தாம்பரம் மாவட்ட மகளிரணித் தலைவர் இறைவி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன், தோழர்கள் இசையின்பன், திவாரி, நனி பூட்கை, தங்க மணி, தனலட்சுமி இணையர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment