திருநங்கையர்க்கு தனி இடஒதுக்கீடு இல்லையாம் : ஒன்றிய பிஜேபி அரசு
புதுடில்லி, ஜூலை 29 திருநங்கை யரை, “சமூக மற்றும் கல்வி யில் பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, அரசு வேலைகள் மற்றும் உயர் கல்வியில் அனைத்து வகையான இட ஒதுக்கீடுகளையும் வழங்க வேண்டும்” என்று 2014-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் அமைச்சகம், எதிர் பிரமாணப் பத்திரங்களை தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை முதன்மைப்படுத்தும் நோக்கத்திற்காக அரசு இடஒதுக் கீடு வழங்குகிறது என்றும், திரு நங்கையர்க்கு கல்வி அல்லது வேலை வாய்ப்பில் தனி இடஒதுக் கீடு இல்லை என்று உச்சநீதிமன் றத்தில் கூறியுள்ளது. “ஒன்றிய அர சுப் பணிகளில் நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறு வதில், தாழ்த்தப்பட்ட சமூகத்தின ருக்கு (ஷிசி)- 15 சதவிகிதம்; பட்டியல் பழங்குடியினருக்கு (ஷிஜி) 7.5 சதவிகிதம்; சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கு (ஷிணிஙிசி) - 27 சதவிகிதம்; பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (ணிகீஷி) - 10 சதவிகிதம் என பலன் பெறுகின் றனர். எனவே, பட்டியல் வகுப் பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த திருநங்கைகள், அந்தந்த சமூ கங்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்
களில் இடஒதுக்கீடு கோரிப் பெறலாம் “ரூ. 8 லட்சம் வருமான வரம்பிற்குள் வராத திருநங்கையர் தானாகவே,
இ.டபிள்யு.எஸ். பிரிவில் சேர்க்கப்படு வார்கள்” என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment