நெம்மெலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவுப்படுத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

நெம்மெலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவுப்படுத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 31-  சென்னைக்கு குடிநீர் வழங்கும், கடல்நீரை குடி நீராக்கும் நெம்மேலி- - 2 திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று (30.7.2023) கடலில் குழாய் பதிக்கும் பணியை ஆய்வு செய்தார். 

சென்னையின் குடிநீர் தேவைக்கு, கடல் நீரை குடிநீராக் கும் நெம்மேலி  - 1 திட்டத்தின் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.

நெம்மேலி- - 2 திட்டத்தில், 1,516 கோடி ரூபாயில், 15 கோடி லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்பட்டு வருகிறது. கடல்சார் பணியான, 2,250 மி.மீ., விட்டம், 1,035 மீட்டர் நீளம் கொண்ட, கடல் நீரை உட்கொள் ளும் குழாய்கள், 835 மீட்டர் கடலுக்கடியில் பதிக்கப்பட்டு உள் ளது. மீதம், 200 மீட்டர் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

அதேபோல், சுத்திகரித்த பின் உபரி நீரை கடலுக்குள் கொண்டு செல்ல, 1,600 மி.மீ., விட்டம், 636 மீட்டர் நீளம் கொண்ட குழாயில், 600 மீட்டர் பதிக்கப்பட்டு உள் ளது. மீதம், 36 மீட்டர் பதிக்கும் பணி நடக்கிறது. சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குழாய் பதிக்கும் பணிகளை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, ஆய்வு செய்தார். கட்டமைப்பு பணிகள், சுத்திகரிப்பு செயல்பாடுகள் குறித்து, அதிகாரி களிடம் அப்போது கேட்டறிந்தார். 

கடலுக்கடியில் குழாய் பதிக்கும் பணிகளை, குறிப்பிட்ட காலத் திற்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

குழாய் பதிக்கும் பணி முடிந்து, ஆகஸ்ட் இறுதியில் துவங்கி, தொடர்ந்து மூன்று மாதங்கள் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதன்பின், சென்னை மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கப்படும் என, அதிகாரிகள் கூறினர். ஆய்வின்போது, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தலைமை பொறியாளர் கந்தசாமி உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.

சுத்திகரிப்பு நிலைய கட்டமைப்பு விபரம்

கடல்சார் பணிகள், இயந்திர வியல், மின்சார இணைப்பு என, மூன்று கட்ட பணிகள் நடைபெற் றுள்ளன. 

கடல்நீரை உட்கொள்ளும் குழாய், உபரிநீர் வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள்வாங்க ஆழ் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற் றழுத்தம் கொண்டு எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டிய நீரை தேக் கும் தொட்டி, வடிகட்டிய கடல் நீர் உந்து நிலையம் கட்டமைக்கப் பட்டு உள்ளன.

மேலும், நுண் வடிகட்டி, எதிர் மழை சவ்வூடு பரவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், கசடுகள் கெட்டிப் படுத்தும் பிரிவு, செதிலடுக்கு வடி கட்டி, சுண்ணாம்பு செறியூட்டும் நிலையம் உள்ளன. இதோடு, நிர் வாகம் மற்றும் காப்பாளர் கட்ட டம், புவியியல் தகவல் மய்யம் ஆகியவை அமைக்கப்பட்டு உள் ளன.

பயன் அடையும் பகுதிகள்

கடல்நீரை குடிநீராக்கும் நெம் மேலி  - 2 திட்டத்தின் மூலம், சென்னை வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவி லம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க் கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், -புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம் மற்றும் ஓ.எம்.ஆர்., சாலை பகுதிகள் பயனடையும்.


No comments:

Post a Comment