தன்னலம் பாராது பிறர்நலம் பேணும் சிந்தனை கொண்ட தலைவர் கலைஞர், சமூகநீதி சமத்துவம் அனைவருக்கும் அனைத்தும் என்ற எண்ண ஓட்டத்தை நாடி நரம்புகள் எல்லாம் ஏற்றி பணி செய்தவர். தான் ஆட்சியில் இருக்கும் போதும் ஆட்சியில் இல்லாத போதும் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கான உரிமைகளைப் பெற உழைத்துகொண்டு இருந்தார்.
1971ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு 16 % என்பது 18% என உயர்த்தப்பட்டது. (செட்யூல்ட் டிரைப்) தனியே ஒரு சதவீதமும் ஒதுக்கீடு செய்து 22.6.1990 அன்று ஆணை - அருந்ததியர் சமுதாய மக்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் கடந்த 29.5.2009 அன்று ஆணையிட்டார்.
புதிரை வண்ணார் மக்களுக்காக நல வாரியம் உருவாக்கியவர் கலைஞர் (அரசாணை - http://G.O.Ms.No.1 14, AD & TW(ADW_6) Department, dated 15.10.2009)
ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் 1989, கலைஞர் அரசு, பிஏ, பிஎஸ்சி, பிகாம் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும், மலை வாழ் ஜாதியினருக்கும் இலவச கல்வி வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார்.
மேலும் குடும்பத்தில் முதல் வாரிசு யாராவது தொழிற்கல்வி படித்தால், அவர்கள் குடும்பம் ஆண்டிற்கு 15000 ரூபாய்க்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கும், மலை வாழ் ஜாதியினருக்கும் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று அளித்து உத்தரவிட்டார். கலைஞர், ஆதி திராவிடருக்கு முந்தைய 1974 ஆட்சியில் 30000 வீடுகளை கட்டி கொடுத்தார்.
ஆனால் 13 ஆண்டுகளில் வெறும் 36,000 வீடுகளை கட்டி கொடுத்தது அதிமுக அரசு மீண்டும் 1989-1990இல் திமுக ஆட்சியில் 42000 வீடுகளும், 1990-1991இல் அதுவே 47000 வீடுகளை கட்டிக்கொடுத்தார். ஆதி திராவிடர்கள் தொழில் முனைவோர் இருந்தால் அவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10,000 ஊக்கத் தொகை, பிற்பாடு ரூ.15,000 என்றாக்கி உத்தரவிட்டார். 2007இல் தூய்மைப் பணி புரி வோர் நல வாரியத்தை திமுக அரசு தொடங்கியது.
அனைத்து ஒன்றிய மாநில அரசுத் திட்டங்களிலும் ஆதிதிராடர்களுக்கு 33% ஒதுக்கீடும் சிலவற்றில் 50%ம் வழங்கப்படுகிறது. அது கட்டாயம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்திரா வீட்டுவசதித் திட்டம் மூலம் வீடுகள் மற்றும் பெரியார் சமத்துவபுரம் கொண்டு வந்து அனைரும் சமம் என்பதை நிறுவவில்லையா? அதுவும் கலைஞர்தானே.
அம்பேத்கார் பெயரில் சட்டப்பல்கலை கழகம் அமைத்தது கலைஞரே. ஜாதி மறுப்பு திருமண ஆதரவும் ஊக்கத்தொகையும் தி.மு.க.தான் வழங்கியது.திமுக ஆட்சியில்தான் மிக அதிக அளவில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு என்கிற ஆணையை பிறப்பித்தது திமுகதான்
முதன்முறையாக தாழ்த்தப்பட்ட வகுப்பாரான வரதராசன் அவர்களை நீதிபதியாக நியமனம்பள்ளி இறுதியாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை.
18 சதவீத ஒடுக்கப்பட்ட மாணவர்களின் இடங்கள் பூர்த்தியாகாமல் இருக்கும் நிலையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை நியமிக்க தடை விதித்தார் இரட்டை மலை சீனிவாசன் நினைவு அஞ்சல் தலை வெளியிட்டார் உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்ற திட்டத்தின் படி 2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட இனத்தவர் விமான ஓட்டியாக உருவாக இலவச பயிற்சியை தந்தார்
அறங்காவலர் குழுவிலும், கூட்டுறவு நிர்வாகத்திலும் கட்டாயமாக தாழ்த்தப்பட்டஇன பிரதிநிதி கட்டாயம் அறிவித்தார்.
கலை அறிவியல் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்வதற்கு பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும் என ஆணை கொண்டு வந்தார், பின்னர் இது பொறியியல் கல்லூரிகளிலும் கொண்டு வந்தார் சீனியாரிட்டி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட முதன்மை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக கலைஞர் காலத்தில் பதவியுயர்வு பெற்றனர்.
கல்நார் வீடுகளை கட்டித் தந்தார்.
தமிழ்நாடு தேர்வாணையக்குழு தலைவராக ஆதிதிராவிடர் முருகராஜ் அவர்களை நியமித்தார் தன் இல்லத்தில் ஜாதி மறுப்பு சம்பந்தம் செய்தவர் கலைஞர்.
No comments:
Post a Comment