ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். தலைமைச் செயற்குழு மற்றும் கழகப் பொதுக்குழு தீர்மானங் களை விளக்கி இயக்க செயல்பாடு களை விளக்கி கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் சிவன் பி.என்.பாளையம் கழகத் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் ரஞ்சித், செயலாளர் திராவிட பேபி, துணைச் செயலாளர் தனுஷ், அமைப்பாளர் பிரவீன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கழக தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங் களை வரவேற்பதுடன் அவற்றை செயல்படுத்திட முடிவெடுக்கப் பட்டது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி நடுவீரப் பட்டு நடைபெற உள்ள பெரியார் இயற்பயிற்சி பட்டறையில் திரளாக தோழர்கள் பங்கேற்பது எனவும் ஒன்றிய முழுவதும் பத்து இடங்களில் வைக்கம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டங்களை நடத் துவது என்றும் விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு ஆகிய இதழ் களுக்கு சந்தாக்களை சேர்த்து வழங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் தோழர் ரமேஷ் நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான புதிய வரவு கள் பங்கேற்று பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment