குடந்தையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-குருதிக்கொடை முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

குடந்தையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-குருதிக்கொடை முகாம்

குடந்தை, ஜூலை 2 - முத்தமிழறிஞர், தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகம் கண்ட தலைவர், கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழ்நாடு முழுக்க மக்கள் பயன் பெரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் - கும்பகோணம் மண்டலம் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை - கும்ப கோணம் இணைந்து நடத்திய குருதி கொடை முகாம் 30.6.2023 அன்று காலை தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் தலை மையகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து கழகத்தின் பணியாளர்கள் 30க்கு மேற் பட்டோர் குருதிக் கொடை வழங்கினார்கள்.

போக்குவரத்து கழகத்தின் பொதுமேலாளர் க.இளங்கோ வன், மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.இராஜ்மோகன் , அரசு மருத்துவமனை குருதி வங்கி அதிகாரி சுகந்தி,  துணை மேலாளர் - தொழிற்நுட்பம், துணை மேலாளர் - வணிகம், துணை மேலாளர் - புதுப்பிக்கும் பிரிவு, போக்குவரத்துக் கழகத் தின் உயர் அலுவலர்கள் மற் றும் திராவிடர் தொழிலாளர் சங்கப் பேரவை செயலாளர் குடந்தை குருசாமி, தொழிலா ளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொ.பாண்டியன், குருதிக் கொடை மற்றும் சமூக நலச் சங்க துணைத் தலைவர் ப.க.சங்கர், மற்றும் ஏராளமான தொழிற் சங்க தலைவர்களும், போக்கு வரத்துக் கழக அதிகாரிகளும் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.இராஜ்மோகன், மண்டல பொது மேலாளர் க.இளங் கோவன் ஆகியோருக்கு, "விடு தலையால் விடுதலை" நூலினை திராவிடர் தொழிலாளர் சங் கம் சார்பாக வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment