புதுக்கோட்டை. ஜூலை 27 மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் கடந்த 3.5.2023 அன்று கலவரம் வெடித்தது. அப்போது 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர் வலமாக அழைத்து சென்ற காட்சிப் பதிவு கடந்த 4 நாள்களுக்கு முன்பு வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு நாடுமுழுவதும் பல அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பல்வேறு அமைப்புகள் மற்றும் மாதர் சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவர் அமைப்புகளும் போராட் டத்தில் குதித்துள்ளனர்.
கறம்பக்குடி
அதன்படி புதுக்கோட்டை மாவட் டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாண வர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண் டித்து நேற்று (26.7.2023) வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட் டனர். முன்னதாக கல்லூரி தொடங் கியவுடன் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்திய மாணவர் சங்க செயலாளர் மதன்குமார் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து வெளியேறினர். பின்னர் கல் லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து மாவட்ட துணைச்செயலாளர் பிரி யங்கா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணிப்பூரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரியும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும் முழக்கம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாணவர் அமைப்பினர், மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிர மடையும் எனவும், சாலை மறியல் உள் ளிட்ட போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்
நேற்று (26.7.2023) காலை விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கல்லூரிக்கு வந்த மாணவ- மாணவிகள் அனைவரும் காலை 10 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத் தில் ஒன்று திரண்டனர். அப்போது, மணிப்பூரில் பெண்களை துன்புறுத்தி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத் துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், இதற்கு நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்தும் மாணவ- மாணவிகள் முழக்கம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட் டத்தை முடித்துக்கொண்டு அவர்கள் அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் விழுப்புரம் சாலாமேடு பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளும், மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பியவாறு வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப் படுத்த வலியுறுத்தி கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் அரசினர் ஆண்கள் தன்னாட்சி கல்லூரி வாசல் முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது கல்லூரி மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் பிரதீப் தலைமை தாங்கினார். கிளை உறுப்பினர்கள் கோபி, அபி, நவின், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராகுல், தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த வேண்டும். அங்கு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்ற வாளிகளை கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக் கங்கள் எழுப்பப்பட்டன. போராட் டத்தையொட்டி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப் படுத்தக்கோரி மதுக்கூர் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய பொறுப்பு செயலாளர் அய்யநாதன் தலைமை தாங்கினார். மூத்ததலைவர் காசிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஒன்றிய செயலாளர் சிதம்பரம், மாவட்ட குழு உறுப்பினர் பழனிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment