ஹிஸ்ஸார், ஜூலை 9 ராகுல் காந்தி நேற்று (8.7.2023) டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதார். அதன்பிறகு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியை பலப்படுத்த பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி, நேரில் மக் களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கருநாடக மாநி லம் கோலாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நாடாளுமன்ற உறுப் பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கன்னியாகுமரி யில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை நடைப்பயணம் செய்தார். சமீபத் தில் டில்லி கரோல் பாகாவில் இரு சக்கர வாகனம் பழுது பார்ப்பவர் களை சந்தித்து உரையாடினார். ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று டில்லியில் இருந்து இமாச்சல் பிரதேசத்தின் சிம்லாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அவர் சென்ற சாலையோரத்தில் விவசாயிகள் வயலில் நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டி ருந்தனர். இதை பார்த்த ராகுல் காந்தி உடனடியாக காரை நிறுத்த கூறினார். காரில் இருந்து கீழே இறங்கிய அவர், வயலில் இறங்கி நாற்று நடவு செய்தார். அதன்பிறகு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலும் டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதார். இந்த ஒளிப் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment