* ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் அ.பொன் முகிலன் - செல்வி, கழக குடும்பத்தைச் சேர்ந்த அ.வெங் கடாசலபதி-சரோஜா ஆகியோரின் தாயார் சீரங்காயம்மாள் (வயது 82) இன்று (18.07.2023) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது உடல் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுமின்றி மாலை அடக்கம் செய்யப் பட்டது. தொடர்புக்கு பொன்முகிலன் 9994814152.
* திண்டுக்கல் அய்யனார் புத்தக மய்ய உரிமையாளரும், பெரியார் பற்றாளரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவருமான ப.பூவலிங்கம் (வயது 89) இன்று காலை 5 மணியளவில் மறைவுற்றார்.செய்தியறிந்த மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், அமைப்பாளர் பழ.இராசேந்திரன், தி.தொ.க. பேரவை செயலாளர் மு.நாகராசன், துணை செயலாளர் தி.க. செல் வம், மாநகரத் தலைவர் அ.மாணிக்கம், செயலாளர் த.கண பதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.பாண்டியன் ஆகியோர் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். மறைந்த ப.பூவலிங்கம் அவர்களின் மகன்கள் பூ.நாகராசன், பூ.முத்து மாணிக்கம், பூ.முருகன் ஆகியோரிடம் இரங்கலை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment