விருதுநகர் சி.பி.அய். பொறுப்பாளரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் கே.எஸ்.காதர்முகையதீன் - சபியா இணையரது பேத்தியும், கா.முபாரக் - தில்ஷாத் இணை யரது மகளுமான கா.மு.நேசத், சென்னை அல்லாபிச்சை - பரக்கத் இணையரது மகன் அ.முகம்மது இக்பால் இவர்களது மணவிழா 9.7.2023 ஞாயிறு காலை 11 மணியளவில், விருதுநகர் முஸ்லிம் பள்ளி வாசல் ஜமாஅத் கல்வி வளாக அரங்கில், சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில், முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் முன்னிலையில் நடைபெற்றது. சி.பி.அய். மாவட்டச் செயலாளர் மொ.லிங்கம், மேனாள் மாவட்டச் செயலாளர் இராமசாமி, திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண் முகசுந்தரம், மகளிரணி அமைப்பாளர் பொன்மேனி ராஜயோகம் மற்றும் அனைத் துக் கட்சிப் பொறுப்பாளர்கள், தோழர்கள், உற்றார் உறவினர் நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 இரண்டாயிரம் நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்! நன்றி!!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment