துக்ளக் குருமூர்த்தி மன்னிப்பு டில்லி உயர்நீதிமன்றம் விடுவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

துக்ளக் குருமூர்த்தி மன்னிப்பு டில்லி உயர்நீதிமன்றம் விடுவிப்பு

புதுடில்லி, ஜூலை 14 நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

டில்லி உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதியும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தற்போ தைய தலைமை நீதிபதியுமான நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதி ராக ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் காரணமாக கிரி மினல் வழக்கு பதிவு செய்யப்பட் டிருந்த நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரிய தால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018இல் அய்.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அப்போ தைய டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அப்போது பாஜக ஆதரவாளரான ஆடிட் டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியது. குருமூர்த்தியின் இந்த ட்வீட்டுக்கு எதிராக வழக் குரைஞர் சங்கத்தினர் டில்லி உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரிக்கப் பட்டு வந்தது. டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜரான நீதிபதி முரளிதர், ப.சிதம்பரத்திற்கும் தனக்கும் எந்த விதமான உறவும் இல்லை என்றும், அவரிடம் தான் ஜூனியராக பணிபுரிந்த தில்லை என்றும் தெளிவுபடுத் தினார். 

மேலும், குருமூர்த்தி நீதிமன் றத்தில் வருத்தம் தெரிவித்த தோடு, அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட அனைத்து ட்வீட்களையும் நீக்கியதாகவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதையடுத்து, குரு மூர்த்தியின் மன்னிப்பு மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை   ஏற்றுக் கொண்டு நீதிபதி எஸ்.முரளி தருக்கு எதிரான அவரது ட்வீட் தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கில் இருந்து குருமூர்த்தியை டில்லி உயர் நீதிமன்றம் விடு வித்துள்ளது


No comments:

Post a Comment