தேர்தலை குறி வைத்து பிஜேபி நிர்வாகிகள் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

தேர்தலை குறி வைத்து பிஜேபி நிர்வாகிகள் மாற்றம்

புதுடில்லி, ஜூலை 30 - மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களை குறிவைத்து பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சிறுபான்மையின ரான காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி மற்றும் 2 முஸ்லிம்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 புதியவர்கள் பட்டியலில் 13 தேசிய துணைத் தலைவர்கள், 13 தேசிய செயலாளர்கள், 8 பொதுச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் அமைப்புச் செயலா ளர், இணை அமைப்புச் செயலாளர், தேசிய பொருளாளர் மற்றும் துணைப் பொருளாளர் தலா ஒருவர் இடம்பெற் றுள்ளனர். இந்த 38 பேர் பட்டியலில்10 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 13 துணைத் தலைவர்களில் 5 பேரும், 13 தேசிய செயலாளர்களில் 5 பேரும் பெண்களாக உள்ளனர்.

பாஜக முதன்முறை யாக முஸ்லிம் வாக்கு களை இந்தமுறை குறி வைத்துள்ளது. இதற்காக அலிகர் முஸ்லிம் பல் கலைக்கழக மேனாள் துணவேந்தர் தாரீக் மன் சூர், கேரளாவின் அப் துல்லா குட்டி ஆகியோர் தேசிய துணைத் தலைவர் களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பேராசிரியர் தாரீக் மன் சூருக்கு ஏற்கெனவே உ.பி. மேல்சபை உறுப்பி னர் பதவி அளிக்கப்பட் டுள்ளது. உ.பி.யை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.ராதா மோகன் அகர்வாலும் தேசியப் பொதுச் செயலாளராகி உள்ளார். கேரளாவில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஓருவ ரான ஏ.கே.அந்தோனி யின் மகன் அனில் அந் தோனி சமீபத்தில் பாஜக வில் இணைந்தார். இவ ருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பான தேசிய செயலாளர் பதவி அளிக் கப்பட்டுள்ளது. இவருடன், துணைத் தலைவர் பதவி பெற்றுள்ள அப் துல்லா குட்டியும் கேரளா சிறுபான்மையினர் இடையே பாஜகவிற்கு வாக்குகள் பெற்றுத் தரு வார்கள் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. 

கருநாடக பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி, அசாம் எம்.பி. திலீப் சாக் கியா ஆகியோர் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டு உள்ளனர். இதுபோல் பீகார் நாடாளுமன்ற உறுப் பினர் ராதா மோகன் சிங், தேசிய துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். தெலங்கானா, ஆந்திரா, ஜார்க் கண்ட் மற்றும் பஞ்சா பிற்கு புதிய மாநிலத் தலை வர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திர மேனாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகள் டி.புரந்தரேஸ்வரி அம்மாநில பாஜக தலை வராக அமர்த்தப்பட்டுள் ளார். காங்கிரஸ் தலை மையிலான ஆட்சியில் ஒன்றிய அமைச்சராக இருந்த இவர், கடந்த 2014-இல் பாஜகவில் இணைந்தார். தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய், தேசிய பொதுச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதனால் காலியான தெலங்கானா பாஜக தலை வர் பதவியில் மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி அமர்த்தப்பட்டு உள்ளார்.

தெலங்கானா மேனாள் அமைச்சர் ஈடல ராஜேந்திரா, பாஜகவின் தேர்தல் நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற் கிறார். ஆந்திர மேனாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டிக்கு பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பதவி கிடைத் துள்ளது. பஞ்சாபில் காங் கிரஸ் முக்கியத் தலைவர்க ளில் ஒருவரான சுனில் ஜாக்கர் கடந்த சட்டப் பேரவை தேர்தலுக்கு முன் பாஜகவில் சேர்ந் தார். அவருக்கு மாநில பாஜக தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் மேனாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி, அம்மாநில பாஜக தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார். மகாராட்டிராவில் அதிருப்தி காட்டி வந்த பங்கஜ் முண்டேவுக்கு தேசிய செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் பாஜக தேசிய நிர்வாக அமைப்பில் மேலும் சில மாற்றங்கள் எதிர்பார்க் கப்படுகிறது. இந்த மாற் றங்கள் அனைத்தும் 2024 மக்களவை தேர்தலை குறிவைத்து செய்யப்பட் டுள்ளன. 

இதில் பதவி நீக்கப் பட்ட தலைவர்கள் பல ருக்கு மக்களவை தேர் தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.

No comments:

Post a Comment