சென்னை: ஜூலை 20 தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் க.பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய் துள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார்.
இந்நிலையில் சென்னை ஆழ் வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி சந்தித்தார். எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் 2 நாள் பெங்களூரு சென்ற நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. முதலமைச்சர் பெங்களூருவில் இருந்தபோது தொலைப்பேசியில் அமைச்சர் க.பொன்முடியுடன் பேசிய நிலையில் தற்போது சந்தித்துள்ளார்
No comments:
Post a Comment