மணிப்பூர் கலவரம் : முகாம்களில் இருந்தவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

மணிப்பூர் கலவரம் : முகாம்களில் இருந்தவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

இம்பால், ஜூலை 1 மணிப்பூரில் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்த காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி மக்கள் அமைதி பேணும்படி வலி யுறுத்தினார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் இனத்தினருக்கு பழங் குடியினர் தகுதி  வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. ஆங்காங்கே தீ வைப்பு, துப்பாக்கி சூடு, மோதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறிய படி இருந்து வருகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் பயண மாக 29.6.2023 அன்று   மணிப்பூர் சென்றார். கலவரத்தால் பாதிக்கப் பட்ட சுராசந்த்பூருக்கு ராகுல் சாலை மார்க்கமாக செல்ல முயன் றார். ஆனால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினார்கள். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்ற ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இரண்டாவது நாளாக நேற்று (30.6.2023)  இம் பாலில் இருந்து காலை பிஷ்னுபூர் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்ற ராகுல்காந்தி மொய்ராங்கில் உள்ள இரண்டு நிவாரண முகாம்களில் பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்தார். அவர் களது குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி பின்னர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மணிப்பூர் மேனாள் முதலமைச்சர் ஒக்ராம், காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட் டோர் அப்போது உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து  ராகுல் காந்தி மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உக்கியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மணிப்பூரில் அமைதி நிலவ என்ன தேவையோ அதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அமைதி காக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள் கிறேன். வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.மணிப்பூருக்கு அமைதி தேவை” என்றார். தொடர்ந்து மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு, அய்க்கிய நாகா கவுன்சில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் கோரிக்கை குழு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளை சந்தித்த ராகுல்காந்தி அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்தார்.


No comments:

Post a Comment