தஞ்சாவூர், ஜூலை 26- தஞ்சை மாநகர், கீழவாசல் மார்கெட் எதிரில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் 24.7.2023 அன்று மாலை 6 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
கீழவாசல் பகுதி செயலாளர் பெ.கணேசன் இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாநகர துணைத் தலைவர் செ.தமிழ்செல்வன் தலைமை யேற்று உரையாற்றினார்.
திமுக மாவட்ட பிரதிநிதி ஆர். எஸ்.ரவி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளார் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், கழக காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர் கள் தொடர்கவுரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார்
இக்கூட்டத்தின் தொடக்கத் தில் க.சுடர்வேந்தன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தி னார். மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி ஆகியோர் கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடினர்.
தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம் அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.
மாநில மாணவர் கழக செய லாளர் இரா.செந்தூரபாண்டியன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், அம்மாபேட்டை ஒன் றிய செயலாளர் சவு.காத்தையன், கரந்தை தனபால், மாவட்ட தொழி லாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாநில இளைஞரணி துணை செய லாளர் முனைவர் வே ராஜவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், கழக சொற்பொழிவா ளர் பூவை.புலிகேசி, மருத்துவ கல் லூரி பகுதி செயலாளர் பா.விஜயக் குமார், இளைஞரணி தோழர் க.இமயவரம்பன், கரந்தை விஜயன் மற்றும் பொதுமக்கள், கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment