மூச்சுப் பயிற்சியை மெச்சும் அறிவியல் நுட்பம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

மூச்சுப் பயிற்சியை மெச்சும் அறிவியல் நுட்பம்!

வெறும் 5 நிமிட மூச்சுப் பயிற்சி மூலம், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் கோளாறு, இதயக் குறைபாடு போன்றவற்றை கணிசமாக குறைக்க முடியும். நம்ப முடியவில்லையா?

அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள், கடந்த சில ஆண்டுகளாக அய்.எம்.எஸ்.டி., என்ற புதுமையான மூச்சுப் பயிற்சியை உருவாக்கி சோதித்து வருகின்றனர்.

மூச்சை உள்வாங்குவதற்கு உதவும் தசைகளுக்கு மட்டும் சற்று கடுமையான பயிற்சியை தருவது தான் அய்.எம்.எஸ்.டி. மூக்கில் அடைப்பை ஏற்படுத்திவிட்டு, ஒரு சிறிய கருவி மூலம் வாய் வழியே சுவாசிப்பது தான் அந்த எளிய பயிற்சி.கையடக்கமான கருவி, காற்றை வாய்க்குள்ளிருந்து வெளியே இழுக்கும். அதை எதிர்த்து, நாம் காற்றை வாய் வழியே சுவாசிக்க வேண்டும்.

இந்த எதிர்ப்பை சமாளிப்பதற்கு, உள் சுவாசத்திற்கு உதவும் தசைகள் மட்டும் கடுமையாக வேலை செய்யும். இதனால் பல நன்மைகள் கிடைப்பதாக கொலராடோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூச்சுக் கருவி மூலம் 30 முறை அல்லது 5 நிமிடங்களுக்கு பயிற்சி செய்தால் போதும் என்று கொலராடோ விஞ்ஞானிகளின் ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு, அண்மையில் 'ஜர்னல் ஆப் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன்' இதழில் வந் துள்ளது. கொலராடோ ஆய்வகத்தில் உருவாக்கி யிருக்கும் புதுமையான மூச்சுப் பயிற்சி, சிக்கலான வேதி மருந்துகளைவிட, நல்ல முறையில் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது ஏரோபிக் உடற்பயிற்சியைவிட மிக எளிதாக இருந்தாலும். உடல்நலத்திற்கு நல்ல பலனைத் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment