சென்னை, ஜூலை 2 செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதான ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்து கடிதம் எழுதியதை எதிர்த்து வழக்குரைஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அடுத்தவாரம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் சாசனப்படி ஆளுநர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது, மேலும் ஆளுநர் தனது முடிவு குறித்து ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக, ஆளுநர் ரவி உத்தரவிட்டதாக இரவு 7 மணியளவில் செய்தி வெளியானது. ஆளுநரின் உத்தரவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் கண்ட னத்தை பதிவு செய்தனர். இதனிடையே, அன்றைய தினமே நள்ளிரவு 12 மணியளவில் ஆளுநரின் நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அட்டார்னி ஜெனரல் கருத்தை கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment