செங்கல்பட்டு, ஜூலை 31- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18 வயதை கடந்தும் முதிர்வுத்தொகை பெறப் படாமல் உள்ளவர்கள், தாங்கள் பயனடைந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ள வைப்புத்தொகை பத்திரத்தின் நகல், அவரது பெயரில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழ் நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எண்ணிக்கை போன்றவற்றுடன் நேரில் சென்று சமூக நல விரிவாக்க அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பயனாளிகளின் கருத்துரு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்குண்டான முதிர்வுத் தொகை அவரது வங்கிக் கணக்குக்கு பெற்று வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு மாதத்தின் 2ஆவது செவ்வாய் கிழமை களிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலத்திலும் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18 வயதை கடந்து பயனாளிகள் முதிர்வு தொகை பெறுவதற்கான கருத்துருவினை சமர்பிக்க பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment