சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக மேற் கொள்ளப்படும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சென்னை மாநக ராட்சி, சென்னை மாவட்ட நிர்வாகம், கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உள் ளிட்ட துறை சார்ந்த அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் நேற்று (8.7.2023) நடை பெற்றது.
கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஜெ.ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தியவை:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நியாய விலை கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் எண்ணிக் கையின் அடிப்படையில் பள்ளிக் கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இரவு காப்பகங்கள் என தேவையான முகாம் களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேவையான இடங்களில் பந்தல்களும், மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப் பிணிகள் போன்றோருக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மண்டல அலுவலர்கள் சம் பந்தப்பட்ட காவல் துறை ஆய்வா ளர்களை தொடர்பு கொண்டு முகாம்கள் நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அலுவலர், உதவிப் பொறி யாளர், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். மேலும், பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பின் அமைச்சுப் பணியாளர்களும் நியமிக்கப்படு வார்கள். இந்தப் பணிகளை மேற் பார்வையிட மண்டல அலுவலர்கள் தலைமையில், செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள், உதவி கணக்கு அலுவ லர்கள், உதவி மின் பொறியாளர்கள் நிலையில் ஒரு அதிகாரியும், அந்தப் பகுதியைச் சார்ந்த ஒரு உதவி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்துக்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக பெருநகர மாநகராட்சி உதவி வருவாய் அலு வலர்களுக்கு கடந்த 6-ஆம் தேதி பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மூலமாக பயோ மெட்ரிக் வாயிலாக பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும். அனைத்து துறை அலுவலர்களும் திட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ராஜாராமன், சென்னை ஆட்சியர் மு.அருணா, கூடு தல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னை மாநகராட்சி கூடு தல் ஆணையர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment