வல்லம். ஜூலை 24- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் சாலை விதிமுறைகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி 20.07.2023 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல் துறை ஆய்வாளர் எம்.ஜி. ரவிச் சந்திரன் கலந்து கொண்டு மாணவர் களுடன் கலந்துரையாடினார். குறிப் பாக ஓட்டுநர் உரிமம், தலைக்கவசம், மோட்டார் வாகன பதிவு புத்தகம், மோட்டார் வாகன காப்பீடு குறித்து விரிவாக கூறினார். மேலும் விதி முறைகளை பின்பற்றாத பட்சத்தில் அதற்குரிய தண்டனை மற்றும் அபா ரதம் குறித்து விளக்கினார். குறிப்பாக விபத்திற்கு உள்ளானவர்களுக்கு மனித நேயத்துடன் உதவும் படி கூறி விழிப் புணர்வை ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமாக பதில் கூறினார்.
மொழியியல் துறை முனைவர் லெனின் விழிப்புணர்வு பாடல்களை பாடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முனைவர் அனுசியா வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் பிரியா நன்றியுரை கூறினார்.
இறுதியாக நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணப்பாளர் பேராசிரியர் சந்திரகுமார் பீட்டர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் துறைத்தலைவர், முனைவர் மகேஸ் குமார், முனைவர் குமார், முனைவர் சத்தியா, முனைவர் தியாகராஜன், முனைவர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை பேராசிரியர் நரேந்திர பிரசாத் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட (6 மற்றும் 8 அலகுகள்) அலுவலர்கள், தொண்டர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் காயத்திரி தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment