கோவை, ஜூலை 24- கோவை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 23.07.2023
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு காமராஜர் நகர் கண்ணப் பன் அரங்கில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற் றது. மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்கு ரைஞர் அ.பிரபாகரன், மாவட்ட செயலாளர் புலியகுளம் க.வீரமணி, மாநகரத் தலைவர் தி.க செந்தில்நாதன், மாநகர செயலாளர் ச.திராவிட மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பெ.சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் மு.தமிழ்செல் வம், ப.க மாவட்ட செய லாளர் அக்ரி.நாகராஜ், மாநகர அமைப்பாளர் வெங்கடேஷ், தொ.அ மாவட்ட செயலாளர் வெங்கடாசலம்,தொ.அ பொருளாளர் முத்து மாலையப்பன், பீளமேடு பகுதி கழக செயலாளர் மா.ரமேஷ்,கணபதி பகுதி செயலாளர் கவி.கிருஷ் ணன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், பிள்ளையார்புரம் ஆனந்த், முத்து கணேஷ், இலைக்கடை செல்வம், இருதயராஜ், ஆவின் சுப் பையா, குறிச்சி குரு, கோபாலகிருஷ்ணன்,கி.செல்வன், பு.தீனா மூர்த்தி ஆகியோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர் இறுதியாக சுந்தராபுரம் பகுதி தலைவர் தெ.குமரேசன் நன்றியுரை கூறினார்.
சென்னை பெரியார் திடலில் கடந்த 6.7.2023 அன்று நடைபெற்ற தலை மைச் செயற்குழு கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவதெனவும், ஆகஸ்ட் 19 கோவையில் நடைபெறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஏராள மான இளைஞர்களையும் மாணவர்களையும் பங்கேற்க செய்து சிறப் பாக நடத்துவதுதெனவும், கோவை மாவட்டம் மற் றும் மாநகரப் பகுதிகள் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதுதெனவும், கோவை மாவட்டம் முழு வதும் விடுதலை சந்தாக் களை புதுப்பித்தல் மற் றும் புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியை மிகத் தீவிரமாக செயல் படுத்துவதெனவும்,
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர் களால் நடத்தப்பட்ட மனித உரிமைப் போராட் டமான வைக்கம் போராட் டம் நூற்றாண்டு- சேரன் மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட் டத்தை கோவையில் நடத்துவது எனவும் கலந் துரையாடலில் தீர்மா னிக்கப்பட்டது.
No comments:
Post a Comment