செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

செய்திச் சுருக்கம்

மதிப்பூதியம்

சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாமன்ற கூட்டத்தில் நேற்று (28.7.2023) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகைக்கு...

பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, 12ஆம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு.

விழிப்புடன்...

அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ் அப், டெலிகிராம், இதர சமூக ஊடக கையாளுதல்கள் மூலம் வரும் லிங்க்-களை தொடர்பு கொள்ள வேண்டாம், மேலும், ஓடிபி-யை பகிர வேண்டாம் என தமிழ்நாடு இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் சஞ்சய்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

பரிந்துரை

பஞ்சாப், அரியானாவில் உள்ளது போல சிறைக் கைதிகள் இல்லற வாழ்வில் ஈடுபடும் வகையில் திட்டம் வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்து ரைத்துள்ளது.

நீர்வரத்து...

ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 18,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் நிலையில், அருவி மற்றும் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment