சென்னை,ஜூலை 23 - கால்நடை மருத்துவ அறிவியல் மாணவர் களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் செல்வகுமார் தெரிவித்தார்.
சென்னை கால்நடை மருத்து வக் கல்லூரியின் ஆண்டு விழா 20.7.2023 அன்று நடைபெற்றது. அதில், மாநில சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரி ஆணையர் தமிழ்வளவன் பங்கே ற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செல்வ குமார் பேசியது:
கடந்த 1903-ஆம் ஆண்டு கால் நடை மருத்துவக் கல்லூரியாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற் போது பல்கலைக்கழகமாக வளர்ச்சி யடைந்துள்ளது. தேசிய அளவில் மிக தொன்மையான, பாரம்பரியமான முன்னோடி கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது. நிகழாண்டில் இந்தியாவி லுள்ள கால்நடை மருத்துவக் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத் தைப் பிடித்தது.
தற்போது கால்நடை மருத் துவக் கல்வியை மேம்படுத்த பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment