வங்கத்தின் முடிவு காட்டுவது என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

வங்கத்தின் முடிவு காட்டுவது என்ன?

புதுடில்லி, ஜூலை 14 மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்தலில் பெரும்  பான்மையான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக் கொடூர மான, பயங்கரமும், வன்முறை வெறியாட்டமும் அரங் கேற்றப்பட்டு, இந்த வெற்றியை அக்கட்சி பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றி குறித்தே கடுமையான கேள்விகள் எழுகின்றன; இந்த வெற்றியின் சட்டப்பூர்வ தன்மை பற்றியும், தார்மீக அடிப்படை பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் கட்சியும், அதன்  தலைமையிலான அரசும் ஜனநாயகப் படுகொலையையே அரங்கேற்றின. தேர் தலுக்கு முன்னதாகவும், தேர்தலின் போதும் அரங்கேற்றப்பட்ட வன்முறை களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக் கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திரிணாமுல் தலைமையிலான வங்கத்தில் தொடர்ந்து ஜனநாயகம் கொடும்  தாக்கு தலுக்கு உள்ளாகி வருகிறது. 

வாக்குப் பதிவின் போது, நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டம், வாக்கு எண்ணிக் கையின் போதும் தொடர்ந்தது. தோல்வி யடைந்த ஆளுங்கட்சி வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூலை 11 செவ்வாயன்றும் கூட வன்முறை வெறி யாட்டமும் அதை தொடர்ந்து காவல் துறை யினரின் துப்பாக்கிச் சூடும் நடந்தது.  இத் தகைய கடுமையான சூழலிலும் கூட திரிணா முல் கட்சிக்கு அடுத்த தாக இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் அணியே இரண்டாவது இடத்தை  பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், திரிணாமுல்லுக்கு அடுத்த தாக பாஜக பெருவாரியான இடங்களை பெற்றுவிட்டதாகவும், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ், இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவை இணைந்த அணி மிக மோசமான தோல்வி அடைந்து விட்டதாகவும் பாஜக மற்றும் திரி ணாமுல் ஆதரவு ஊடகங்கள் செய்திகளை பரப்பி யுள்ளன. ஆனால் உண்மையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் 38 சதவீத வாக்குகளை பெற்றிருந்த பாஜக  தற்போது 16 சதவீத வாக்குகளை இழந்து 

22 சதவீதமே பெற்றுள்ளது. மாறாக, இடது சாரிகள்  மற்றும் மதச்சார் பற்ற அணி கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்கு களை பெற்றிருந்த நிலையில், தற்போது 11 சத வீதம் அதிகரித்து 21 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- சீதாராம் யெச்சூரி, சி.பி.எம். பொதுச்செயலாளர்


No comments:

Post a Comment